நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து ஜெயிலர் - 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து, நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து நடிக்க உள்ளார்.
இந்த நிலையில், படப்பிடிப்பு ஓய்வில் ஒருவார பயணமாக ரஜினி இமயமலைக்குச் சென்றுள்ளார்.
ரிஷிகேஷிலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் எடுக்கப்பட்ட ரஜினியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
இதையும் படிக்க: அபார வரவேற்பு... கூடுதல் திரைகளில் காந்தாரா சாப்டர் - 1!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.