படித்திருக்கிறாயா? இல்லையா? எனக் கேட்டு ரம்யாவைக் கலங்க வைத்த மருத்துவர் திவாகருக்கு நடிகை வியானா அறிவுரை கூறியுள்ளார்.
படிப்பதற்காக சூழல் இல்லாததால், கல்வியைத் தொடர முடியாமல்போன ரம்யாவிடம், அத்தகைய கேள்வி கேட்பது எத்தகைய தாக்கத்தை அவருக்கு கொடுக்கும் என்பதை உணர்த்தும் வகையில் வியானா பேசியுள்ளார்.
பெற்றோர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றதால், கல்வியைத் தொடர முடியாத சூழலில் வளர்ந்த ரம்யாவிடம் திவாகர் கேட்ட கேள்விக்கு எதிராக ஒட்டுமொத்த பிக் பாஸ் வீடும் திரும்பியது.
பெரியவர்களிடம் எப்படிப் பேச வேண்டும் எனத் தெரியாதா? படித்திருக்கிறாயா? இல்லையா? என ஆடல் - பாடல் கலைஞர் ரம்யாவிடம் மருத்துவர் திவாகர் கடுமையாக கேள்வி எழுப்பினார்.
இதனால், மனமுடைந்த ரம்யா அழுதுகொண்டு உள்ளே சென்றுவிட்டார். 'கல்வி குறித்து தொடர்ந்து ஏன்? பேசுகிறீர்கள். என்னுடைய கல்வித் தகுதி என்ன தெரியுமா?' என எஃப்.ஜே., கம்ருதின் உள்ளிட்ட பலரும் திவாகரிடம் ரம்யாவுக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் இரண்டாம் நாளான இன்று (அக். 7) பெரும் பேசுபொருளானது.
இதனைத் தொடர்ந்து மருத்துவர் திவாகரிடம் தனியாகப் பேசிய வியானா கூறியதாவது,
''உங்க மூளையைக் குடைந்து உங்களிடம் உள்ள எதிர்மறையான நபரை வெளிக்கொண்டு வந்துவிடுவார்கள். ஆனால், நீங்கள் அதனை உணர்ந்து செயல்பட வேண்டும். உங்களை எல்லோரும் சூழ்ந்துகொண்டு கேள்வி கேட்டார்கள், ஏன் தெரியுமா?
நீங்கள் ஏற்கெனவே பிரபலமான நபராக உள்ளதால்தான். உங்களுடன் இருப்பதால் அவர்கள் மீதும் அந்த வெளிச்சம் விழும். நீங்கள் ரம்யாவிடம் பேசிய வார்த்தைகள் தவறானவை.
அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டு நகர்ந்திருந்தால், இந்த பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால், நீங்கள் அதனைச் செய்யவில்லை'' எனக் குறிப்பிட்டு திவாகரின் தவறை சுட்டிக்காட்டினார். வயதில் இளையவராக இருந்தாலும் வியானாவின் இத்தகைய செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிக்க | திவாகருக்கு எதிராகத் திரும்பும் பிக் பாஸ் வீடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.