லோகா திரைப்படம் அதிகம் வசூலித்த முதல் மலையாளத் திரைப்படம் என்கிற சாதனையைப் பெற்றுள்ளது.
நடிகர்கள் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லன் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த திரைப்படம் லோகா. சூப்பர் வுமன் கதையாக உருவான இதில் முன்னணி கதாபாத்திரத்தில் கல்யாணி நடித்திருந்தார்.
ஆக்சன் காட்சிகளும் சூப்பர்வுமனாக மாறிய கதையும் சுவாரஸ்யமாக இருந்ததால் இப்படம் இந்தியளவில் கவனம் பெற்று வசூலில் சக்கை போடு போட்டது.
துல்கர் சல்மான் தயாரிப்பில் டோமினிக் அருண் இயக்கத்தில் உருவான லோகா அடுத்தடுத்த பாகங்களையும் கொண்டிருக்கிறது. அதில், துல்கர், டொவினோ தாமஸ், மம்மூட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகவும் மலையாளத்தில் ரூ. 110 கோடியை வசூலித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், மலையாளத் திரையுலகில் அதிகம் வசூலித்த திரைப்படம் என்கிற சாதனையை லோகா புரிந்துள்ளது. இதுவரையிலான வசூலில் அடுத்தடுத்த இடங்களை மோகன்லாலின் எம்புரானும் (ரூ. 260 கோடி), மஞ்ஞுமல் பாய்ஸ் (ரூ. 242 கோடி) திரைப்படங்களும் பெற்றிருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.