செய்திகள்

கிஷன் தாஸ் - ஹர்ஷத் கான் படத்தின் வெளியீட்டுத் தேதி!

“ஆரோமலே” திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது...

இணையதளச் செய்திப் பிரிவு

பிரபல யூடியூபர் ஹர்ஷத் கான் மற்றும் நடிகர் கிஷன் தாஸ் இணைந்து நடித்துள்ள “ஆரோமலே” திரைப்படத்தின் வெளியிட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜே சித்து வி லாக்ஸ் யூடியூப் சேனல் மூலம் பிரபலமான யூடியூபர் ஹர்ஷத் கான், நடிகர் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

“முதல் நீ முடிவும் நீ” திரைப்படத்தின் நாயகன் கிஷன் தாஸ் மற்றும் ஹர்ஷத் கான் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள “ஆரோமலே” எனும் புதிய படத்தை, இயக்குநர் சாரங் தியாகு இயக்கியுள்ளார்.

நடிகர்கள் விடிவி கணேஷ், மேகா ஆகாஷ், ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோரது நடித்துள்ள இப்படத்தை, மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில், ஆரோமலே திரைப்படம் வரும் நவம்பர் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் இன்று (அக். 9) அறிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: ஷேன் நிகாமின் புதிய படத்தில்..! மாட்டிறைச்சி காட்சியை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு!

The team has announced the release date of the film “Aaromale”, starring popular YouTuber Harshad Khan and actor Kishan Das.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருபுவனை நூற்பாலை தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தவளக்குப்பம் காவல் நிலையம் எதிரில் மீனவா்கள் சாலை மறியல்

தென்னிந்தியாவில் 30 கொள்ளை வழக்குகளில் தொடா்புடையவா் உள்பட 3 போ் கைது

புகையிலையில்லா இளைஞா் நலன் விழிப்புணா்வு பிரசாரம்: முதல்வா் என். ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

புதுவையில் மூடப்பட்ட பள்ளி ஹோட்டலாக மாறுகிறது: மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT