ஓடிடியில் நேரடியாக வெளியான அருள்நிதியின் ராம்போ!
அருள்நிதியின் ராம்போ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
அருள்நிதி நாயகனாக நடித்துள்ள ராம்போ திரைப்படம், ஓடிடி தளத்தில் நேரடியாக இன்று(அக். 10) வெளியாகியுள்ளது.
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவான திரைப்படம் ராம்போ.
இந்தப் படத்தில் தன்யா ரவிச்சந்திரன், அபிராமி, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
மிகப் பெரிய வெற்றிப்படமான டிமாண்டி காலனி - 2 படத்துக்குப் பிறகு, நடிகர் அருள்நிதி ராம்போ படத்தில் நடித்துள்ளார். ராம்போ படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் முத்தையா தன்னுடைய வழக்கமான பாணியைத் தவிர்த்து, நகர்ப்புற வாழ்க்கையை மையப்படுத்தி ராம்போ படத்தை எடுத்துள்ளார். இப்படத்துக்கு, ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கலவையான விமர்சனங்களையே பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது, ராம்போ திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
இதையும் படிக்க: தெய்வீக வெற்றி: ரூ.500 கோடியை கடந்த காந்தாரா சாப்டர் 1!
The film Rambo, starring Arulnithi, was released directly on the OTT platform today (Oct. 10).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.