வாரிசு தொடரில் நடித்து வந்த யோகேஷ், இந்தத் தொடரில் இருந்து விலகிய நிலையில், இனி அஷ்வந்த் திலக் நடிக்கவுள்ளார்.
சன், விஜய் தொலைக்காட்சிகளைப் போன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
அதிலும் கார்த்திகை தீபம், அண்ணா, அயலி, வீரா உள்ளிட்ட தொடர்கள் மக்கள் மனங்கவர்ந்த தொடர்களாக உள்ளன.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்ட தொடர் வாரிசு, இந்தத் தொடர் குடும்ப உறவுகளை மையப்படுத்தி விஜய்யின் வாரிசு பட பாணியில் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தொடரில் ஜெய் ஸ்ரீனிவாஸ் நாயகனாகவும், ஸ்வேதா டோரதி நாயகியாகவும் நடித்து வருகின்றனர். இந்தத் தொடர் ரசிகர்களின் விருப்பத் தொடராகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில், வாரிசு தொடரில் பிரேம்குமார் பாத்திரத்தில் யோகேஷ் நடித்து வந்தார். படவாய்ப்பு காரணமாக, யோகேஷ் இந்தத் தொடரில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.
நடிகர் யோகேஷ் வாரிசு தொடரில் இருந்து விலகிய நிலையில், இவருக்குப் பதிலாக நடிகர் அஷ்வந்த் திலக் ஒப்பந்தமாகியுள்ளார்.
யார் இந்த அஷ்வந்த் திலக்
தமிழ் சினிமாவில் ராவணன், பூ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அஷ்வந்த் திலக்.
இவர் அழகி தொடர் மூலம் சின்ன திரையில் அறிமுகமானார். தொடர்ந்து தென்றல், வம்சம், பூவே பூச்சூடவா உள்ளிட்ட பிரபல தொடர்களில் நடித்தார்.
இவர் வானத்தைப் போல, செவ்வந்தி உள்ளிட்ட தொடர்களில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாரி, கார்த்திகை தீபம் உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருகிறார்.
தற்போது வாரிசு தொடரில் அஷ்வந்த் திலக் நடிக்கவுள்ளார்.
இதையும் படிக்க: முதல் வாரத்திலேயே முன்னிலையில் அனுமன் தொடர்! இந்த வார டிஆர்பி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.