தொடங்கிய முதல் வாரத்திலேயே டிஆர்பி பட்டியலில், அனுமன் தொடர், முன்னிலைப் பெற்றுள்ளது.
இதிகாசத்தை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வரும் அனுமன் தொடர், பல தொடர்களைப் பின்னுக்குத் தள்ளி, டிஆர்பியில் முன்னிலையில் உள்ளது.
முன்னதாக ஒளிபரப்பாகி வந்த இராமாயணம் தொடர் டிஆர்பியில் முன்னிலையில் இருந்தது. இந்தத் தொடர் நிறைவடைந்த நிலையில், மாற்றாக தொடங்கப்பட்ட அனுமன் தொடரும் டிஆர்பியில் முன்னிலை வகித்துள்ளது.
சின்ன திரையில் ஒளிபரப்பாகும் எந்தெந்த தொடர்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது என்பதை டிஆர்பியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
அந்தவகையில், தொடர்களின் டிஆர்பி விவரம் வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு தொடர், 9.97 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
சிங்கப் பெண்ணே தொடர் 9.43 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
அன்னம், கயல், மருமகள் ஆகிய தொடர்களின் சங்கமமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட தொடர், 9.27 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது.
எதிர்நீச்சல் தொடர், 9.10 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தில் உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அய்யானார் துணை, சிறகடிக்க ஆசை தொடர்கள் முறையே 7.66, 7.61 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஐந்தாவது, ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளன.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனுமன் தொடர் 6.75 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது.
சின்ன மருமகள், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்கள் முறைய 6.31, 6.17 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று எட்டாவது, ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளன.
ஆடுகளம் தொடர் 5.10 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 10வது இடத்தில் உள்ளது.
இதையும் படிக்க: பிக் பாஸ் சென்ற கமுருதீன்... மகாநதி தொடரில் திடீர் திருப்பம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.