செய்திகள்

நிவின் பாலியின் சர்வம் மயா டீசர்!

சர்வம் மயா டீசர் வெளியானது...

இணையதளச் செய்திப் பிரிவு

நிவின் பாலியின் சர்வம் மயா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான நிவின் பாலிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே வெற்றிப்படம் என எதுவும் அமையவில்லை. காரணம், பிரேமம் படத்தில் மிக அழகாகத் தோற்றமளித்த நிவின், அதன்பிறகு மெல்ல மெல்ல அதீத எடைகொண்ட தோற்றத்திற்குச் சென்றார்.

அதே உடலுடன் சில படங்களிலும் நடித்தார். ஆனால், அவை தோல்விப் படங்களாகவே அமைந்தன. இதனால், நிவினின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

தற்போது, உடல் பருமனைக் குறைத்து மெலிதான தோற்றத்திற்கு மாறி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். இவர், நயன்தாராவுடன் நடித்த டியர் ஸ்டூடன்ஸ் வெளியீட்டிற்குத் தயாராக இருக்கிறது.

தொடர்ந்து, பென்ஸ், மல்டிவெர்ஸ் மன்மதன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நிவின் பாலியின் பிறந்த நாளை முன்னிட்டு நிவின் நடித்து முடித்த சர்வம் மயா திரைப்படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். அகில் சத்யன் இயக்கிய இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

akhil sathyan - nivin pauly's sarvam maya teaser out

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான்: மோதலில் 7 போலீஸாா், 6 பயங்கரவாதிகள் பலி!

வேன்-பைக் மோதல்: வியாபாரி மரணம்

கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் உண்ணாவிரதம்

ஹூண்டாய் விற்பனை 10% அதிகரிப்பு

இறுதிச் சுற்றில் வலேன்டின்! ஜோகோவிச் அதிா்ச்சித் தோல்வி!

SCROLL FOR NEXT