ஒளிப்பதிவாளா் பாபு படம்: எக்ஸ்
செய்திகள்

மூத்த ஒளிப்பதிவாளா் பாபு காலமானாா்!

தமிழ் திரைப்படத் துறையின் மூத்த ஒளிப்பதிவாளா் பாபு (88) சென்னையில் சனிக்கிழமை (அக்.11) காலமானாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழ் திரைப்படத் துறையின் மூத்த ஒளிப்பதிவாளா் பாபு (88) சென்னையில் சனிக்கிழமை (அக்.11) காலமானாா்.

எம்ஜிஆா், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகா்களின் படங்களுக்கு பாபு ஒளிப்பதிவு செய்துள்ளாா். ‘முரட்டுக்காளை’, ‘பாயும் புலி’, ‘சகலகலா வல்லவன்’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’ உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட படங்களுக்கு அவா் ஒளிப்பதிவு செய்துள்ளாா்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒளிப்பதிவு செய்துள்ள பாபு, ரஜினிக்கு மட்டும் 27 படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளாா்.

திரைப்படத் துறையில் ஓய்வில் இருந்து வந்த பாபு, சனிக்கிழமை காலமானாா். அவருக்கு விஸ்வநாத், ஸ்ரீதா் ஆகிய இரு மகன்கள் உள்ளனா்.

சென்னை அபிராமிபுரத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை உடல் தகனம் நடைபெறுகிறது.

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பெங்களூரில் பலத்த மழை: குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்

SCROLL FOR NEXT