செய்திகள்

இவ்வளவு பெரிய படத்தில் இதைக் கவனிக்கவில்லையா?

காந்தாரா சேப்டர் - 1 காட்சி இணையத்தில் வைரல்...

இணையதளச் செய்திப் பிரிவு

காந்தாரா சாப்டர் - 1 திரைப்படத்தின் காட்சியொன்று ரசிகர்களால் கேலி செய்யப்பட்டு வருகிறது.

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த திரைப்படமான காந்தாரா சாப்டர் - 1 படத்திற்கு நல்ல விமர்சனங்களும் வரவேற்பும் கிடைத்திருப்பதால் இதுவரை ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், தற்போது வரை இந்தியாவின் பல பகுதிகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக திரையிடப்பட்டு வருவதால் தீபாவளிக்குள் ரூ. 700 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற பிரம்மகலாஷா பாடலில் ஒரு காட்சியில் தண்ணீர் கேன் இடம்பெற்றுள்ளது. படப்பிடிப்பின்போது வைக்கப்பட்ட அதனை எடிட்டிங்கில் நீக்காமல் விட்டிருக்கின்றனர்.

இதனைக் கண்ட ரசிகர்கள் 400 ஆண்டுகளுக்கு முந்தைய கதையாக உருவான இப்படத்தில் தண்ணீர் கேன் போட வந்தது யார்? எனக் கேலி செய்து வருகின்றனர்.

இது அவ்வளவு பெரிய தவறு இல்லையென்றாலும் உருவாக்க ரீதியாகப் பார்க்கும்போது கவனக்குறைவாக இருந்தது அக்காட்சியின் அழுத்தத்தைக் குறைக்கவே செய்கிறது.

netizens trolled kantara chapter - 1 scene

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

விதி மீறல்: 31 பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டவா் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்றவா் கைது

வீட்டில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT