ராஜ்கிரண் 
செய்திகள்

எம்ஜிஆர் ரசிகராக ராஜ்கிரண்!

வா வாத்தியார் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் ராஜ்கிரண் வா வாத்தியார் திரைப்படத்தில் எம்ஜிஆர் ரசிகராக நடித்துள்ளார்.

நடிகர் கார்த்தி - நலன் குமாரசாமி கூட்டணியில் வா வாத்தியார் திரைப்படம் உருவாகியுள்ளது. சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களைத் தொடர்ந்து நலன் இயக்கிய படமென்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இப்படத்தில் நடிகர் ராஜ்கிரண் நடிகர் கார்த்தியின் தாத்தாவாக நடித்திருக்கிறார். அதுவும் அவர் எம்ஜிஆரின் தீவிரமான ரசிகராக நடித்திருப்பதால் அவரது கதாபாத்திரம் மேல் ஆர்வம் எழுந்துள்ளது.

மேலும், எம்ஜிஆர் ரசிகரான தன் தாத்தாவுக்கு தன்னால் பிரச்னை ஏற்பட, கார்த்தி அதனைச் சரி செய்தாரா இல்லையா என்கிற கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

மெய்யழகன், மாமன், இட்லி கடை திரைப்படங்களைத் தொடர்ந்து இப்படத்திலும் ராஜ்கிரண் கவனம் ஈர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

rajkiran acted as mgr fan in vaa vaathiyar movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுபமாவின் லாக்டவுன் டிரைலர்!

காவல்துறை-வழக்குரைஞர்கள் மோதல்: ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

பரங்கிமலை மாணவி கொலை: குற்றவாளி சதீஷின் மரண தண்டனை குறைப்பு!

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! புதிய உச்சத்தை எட்டிய சென்செக்ஸ், நிஃப்டி!!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

SCROLL FOR NEXT