கல்யாணி பிரியதர்ஷனின் லோகா திரைப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வரலாறு படைத்துள்ளது.
துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவான லோகா சாப்டர் 1 திரைப்படம் ஆக.28ஆம் தேதி வெளியானது.
கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லன் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த திரைப்படம் லோகா. சூப்பர் வுமன் கதையாக உருவான இதில் முன்னணி கதாபாத்திரத்தில் கல்யாணி நடித்திருந்தார்.
ஆக்சன் காட்சிகளும் சூப்பர்வுமனாக மாறிய கதையும் சுவாரஸ்யமாக இருந்ததால் இப்படம் இந்தியளவில் கவனம் பெற்று வசூலில் சக்கை போடு போட்டது.
இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள திரைப்படங்களில் அதிக அளவு வசூலித்த முதல் படமாக லோகா வரலாறு படைத்துள்ளது. இதன் மூலம் மோகன்லாலின் சாதனையை கல்யாணி முறியடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.