நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான ஸ்ருதிகா கடந்த சில நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது கணவரின் அன்பால் இயல்பு நிலைக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதிகா பகிர்ந்துள்ளதாவது,
''அறுவை சிகிச்சைக்குப் பிறகு என்னைப் பார்த்துக் கொள்வதில் எனது கணவர் மிகவும் அக்கறையாக நடந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் அவர் மிகவும் சோர்ந்து விட்டார். இப்போது நான் தான் அவரைப் பார்த்துக் கொள்கிறேன். கப்பிள்ஸ் கோல்ஸ்" எனப் பதிவிட்டுள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்துகொண்ட நடிகை ஸ்ருதிகா, மருத்துவமனையில் இருந்தவாறு சிகிச்சைப் பெறும் விடியோவை பகிர்ந்திருந்தார்.
அதில், ''சரியாக ஓராண்டுக்கு முன்பு, இதே நாளில், நான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தேன். என் வாழ்க்கையின் மறக்க முடியாத அத்தியாயங்களில் ஒன்றை வாழ்ந்தேன். நான் நினைத்துப் பார்க்காத விதத்தில் என் வலிமை, பொறுமை மற்றும் உணர்ச்சிகளை சோதித்த பயணம் அது.
இன்று, ஓராண்டு கழித்து, நான் முற்றிலும் மாறுபட்ட உலகில் இருக்கிறேன். கேமராக்களோ அலங்கார விளக்குகளோ என்னைச் சூழவில்லை. மாறாக மருத்துவர்கள், செவிலியர்கள் சூழ தற்போது இருக்கிறேன். ஒரு பெரிய அறுவை சிகிச்சை தொடங்கியது. வாழ்க்கையின் மற்றொரு அனுபவமாக இது மாறியது'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம் அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டது தெரிகிறது. ஆனால், என்ன சிகிச்சை என்பதை அவர் குறிப்பிட விரும்பவில்லை.
2002ஆம் ஆண்டு வெளியான சூர்யாவின் ஸ்ரீ படத்தில் நடித்த ஸ்ருதிகா, நள தமயந்தி, தித்திக்குதே ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஸ்வப்னம் கொண்டு துலாபாரம் என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அதிகப்படியான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஸ்ருதிகாவின் வெகுளித்தன பேச்சு, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
இதன் பிறகு, ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 18வது சீசனில் போட்டியாளராக பங்கேற்று, 94 நாள்கள் இருந்து ஹிந்தி ரசிகர்களையும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராடுவோம்! தடை செய்ய வலியுறுத்தல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.