துருவ்வின் அடுத்த படம் இதுவா?
துருவ்வின் புதிய திரைப்படம் குறித்து...
நடிகர் துருவ்வின் அடுத்த திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. கபடியை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் நடிகராக துருவ் நல்ல உழைப்பைக் கொடுத்திருப்பதாகவே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இப்படம் வணிக ரீதியாகவும் வெற்றிப்படமாக அமையவுள்ளது என்பதால், துருவ்வின் அடுத்த படம் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், துருவ்வின் புதிய திரைப்படத்தை டாடா படத்தின் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, அவர் ரவி மோகனை வைத்து கராத்தே பாபு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் வெளியீடு முடிந்ததும் துருவ்வுடன் இணையலாம் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: ரசிகர்களைக் கவர்ந்த டியூட் சரத் குமார்!
actor dhruv's next movie with director ganesh k babi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.