சூர்யா நடிக்கும் கருப்பு திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாகியுள்ளது.
இதில் வழக்குரைஞரான சூர்யாவுடன் த்ரிஷா, ஸ்வாசிகா, காளி வெங்கட், இந்திரன்ஸ், யோகி பாபு, நட்டி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு கருப்பு திரைப்படத்தின் முதல் பாடலான காட் மோட் (god mode) பாடலை வெளியிட்டுள்ளனர்.
சாய் அபயங்கர் இசையமைப்பில் விஷ்ணு எடவன் எழுதிய இப்பாடலை சாய் மற்றும் கானா முத்து ஆகியோர் பாடியுள்ளார். சூர்யாவின் நடனமும் இசையும் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.