பழம்பெரும் பாலிவுட் நடிகர் அஸ்ரானி (வயது 84) உடல் நலக் குறைவால் காலமானார்.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வந்தவர் கோவர்தன் அஸ்ரானி. வயது மூப்பினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், நுரையீரல் கோளாறினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் அஸ்ரானி, இன்று (அக். 20) மாலை 3 மணியளவில் உயிரிழந்ததாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 350 படங்களில் நடித்துள்ள நடிகர் அஸ்ரானி, 7 திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும், பிரபல நடிகர் ராஜேஷ் கன்னாவுடன் இணைந்து 25 படங்களில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: விரைவில் புதிய சிம்பொனி..! இளையராஜா வெளியிட்ட அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.