இசையமைப்பாளர் சபேசன் (68) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த இசையமைப்பாளர் சபேசன். இவர் தன் சகோதரர் முரளியுடன் இணைந்து சபேஷ் - முரளி என்கிற பெயரில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்தார். இவர்கள் இருவரும் இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர்கள்.
சமுத்திரம் படம் மூலம் இசையமைப்பாளர்களாக அறிமுகமான இந்த இணை தவமாய் தவமிருந்து, இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, பொக்கிஷம், மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்தனர்.
சபேஷ், தேவாவுடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதால் இன்றும் ரசிக்கப்படும், ‘கொத்தவால் சாவடி லேடி’, ‘அண்ணாநகர் ஆண்டாளு’ ஆகிய பாடல்களைப் பாடியது இவர்தான்.
இசையமைப்பதுடன் மேடைக் கச்சேரிகளிலும் பாடி வந்த இவர், உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரது மறைவிற்குத் திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சபேசன் திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.