மம்மூட்டி பகிர்ந்த பதிவு.  படம்: எக்ஸ் / மம்மூட்டி.
செய்திகள்

அன்பும் நன்றியும்... மம்மூட்டி பகிர்ந்த பதிவு!

நடிகர் மம்மூட்டி பகிர்ந்த பதிவு...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் மம்மூட்டி பகிர்ந்த புதிய பதிவு ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரது உடல்நிலை குறித்து வதந்திகள் வெளியான நிலையில் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மலையாள சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான மம்மூட்டி 74 வயதிலும் தோற்றத்தில் இளமையாகவே இருக்கிறார். இதனால், ரசிகர்கள் பலரும் 74 வயது இளைஞன் என்றே செல்லமாக அழைத்தும் வருகின்றனர்.

இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான பசூகா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியான தோல்வியைச் சந்தித்தது.

தற்போது, களம் காவல் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். அடுத்ததாக, மோகன்லாலுடன் பேட்ரியாட் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவருக்கு புற்றுநோய் பாதித்ததாக வதந்திகள் பரவின. இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

துல்கரிடம் இது குறித்து கேட்டபோது, “லோகா படத்தைப் பற்றி பேசலாம்” எனக் கூறினார்.

வழக்கமாக, ஒன்றிரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கும் மம்மூட்டி, கடந்த சில மாதங்களுக்கும் ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு காரணமாக படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருந்தார்.

தற்போது, தனது எக்ஸ் பக்கத்தில் மம்மூட்டி தனது புகைப்படத்தைப் பகிர்ந்து, “கடவுளுக்கும், அனைவருக்கும் அன்பும் நன்றியும்” எனக் கூறியுள்ளார்.

A new post shared by actor Mammootty has delighted fans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருச்சிதைவு: ஆராய்ச்சிக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கருவை தானமளித்த பெண்!

மல்லை சத்யா மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்

மேட்டூர் அணை நிலவரம்

மூக்கையாத் தேவர் சிலைக்கு அஞ்சலி

போடிமெட்டு மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து- 11 பேர் காயம்

SCROLL FOR NEXT