தனுஷை ஏமாற்ற நினைத்தேன்: விஜய் ஆண்டனி
தனுஷ் குறித்து விஜய் ஆண்டனி...
நடிகர் தனுஷை ஏமாற்ற நினைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி.
இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி, இதுவரை 25 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 25-வது படமான சக்தித் திருமகன் வருகிற செப். 19 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இறுதியாக, விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மார்கன் திரைப்படம் வரவேற்பைப் பெற்றதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. படத்தின் டிரைலரும் ரசிக்கும்படியாக இருப்பதால் வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய விஜய் ஆண்டனி தன் இசைப் பயணம் குறித்தும் நடிகரான அனுபவம் குறித்தும் பேசியுள்ளார்.
அதில், “நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா மூலமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பழக்கமானார். ஒருநாள், தன் கணவர் தனுஷுக்கு இசை மீது ஆர்வம் இருப்பதாகவும் அவருக்கு உதவுமாறும் ஐஸ்வர்யா கூறினார். தொடர்ந்து, திருமணமான புதிதில் தனுஷ் என்னைச் சந்திக்க வந்தார்.
சரி, எதையேனும் இசையமைத்துக் காட்டி ஏமாற்றி அனுப்பிவிடலாம் என நினைத்தேன். ஆனால், தனுஷுக்கு இசை தெரிந்திருந்தது. அதனால், அவர் வரும்போதெல்லாம் எனக்குப் பயமாகிவிட்டது. பின், அவர் கேட்டதை இசையமைத்துக் கொடுத்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: இட்லி கடை டிரைலர் தேதி!
musician and actor vijay antony spokes about actor dhanush
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.