ஹார்ட் பீட் எக்ஸ்
செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் ஹார்ட் பீட் தொடர் நடிகை!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் ஹார்ட் பீட் வெப் தொடர் பிரபலம் பங்கேற்கவுள்ளது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் ஹார்ட் பீட் வெப் தொடரில் நடிக்கும் பாடினி குமார் போட்டியாளராக பங்கேற்கவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன் விரைவில் தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடினி குமார்

விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் வெளி உலகத் தொடர்பின்றி 100 நாள்கள் இருக்க வேண்டும், இடையிடையே நடக்கும் போட்டிகளிலும் வெற்றிப் பெற வேண்டும்.

வார வாரம் நடக்கும் எலிமினேஷனில்(வெளியேற்றம்) மக்கள் மனங்களைக் கவர்ந்த போட்டியாளர் நிகழ்ச்சியில் நீடிப்பார். குறைந்த வாக்குகளைப் பெற்றவர்கள் ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்படுவார். இதுவே இப்போட்டியின் விதிமுறை.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கப்படவுள்ளது. இதில் சினிமா மற்றும் பிறதுறைகளைச் சேர்ந்த, மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள், போட்டியாளர்களாக பங்கேற்பார்கள்.

அந்த வகையில் சின்ன திரை நடிகை நக்‌ஷத்ரா, நடனக் கலைஞரும் சமையல் நிகழ்ச்சியின் பங்கேற்பாளருமான ஜன்மோனி டோலி, பாக்கியலட்சுமி தொடர் பிரபலம் நேஹா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சின்ன திரை நடிகர் புவியரசு உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஹார்ட் பீட் வெப் தொடரில் அனிதா பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான பாடினி குமார், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

கடந்த சீசனை விஜய்சேதுபதி தொகுத்து வழங்கிய நிலையில், புதிய 9வது சீசனையும் விஜய்சேதுபதியே தொகுத்து வழங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

It has been reported that Patini Kumar, who stars in the Heartbeat WeO series, will be participating in Bigg Boss Season 9.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூலோக சொர்க்கத்தில்... ஸாரா!

மொட்டை அடித்தது ஏன்? இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்!

இஸ்ரேல் தாக்குதல்: கத்தார் விரைந்தார் அமீரக அதிபர்!

நேபாளத்தில் 13,000க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்!

இந்தியாவில் 10 லட்சம் மின்சார வாகனங்கள் அமோக விற்பனை!

SCROLL FOR NEXT