1000 ஆண்டுகளுக்கு முந்தைய கதையைப் பேசும் காந்தாரா - 1!
காந்தாரா - 1 கதை குறித்து...
நடிகர் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சேப்டர் - 1 படத்தின் கதைக்களம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1990-களில் நடக்கும் நில உரிமையும் அதனால் ஏற்படும் பிரச்னைகளுமாக படம் உருவாகியிருந்தது.
கன்னட வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி மொத்தம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
Advertisement
Advertisement
படத்தை இயக்கி, நடித்த ரிஷப் ஷெட்டி சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்று அசத்தினார். இதனைத் தொடர்ந்து, காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமான ’காந்தாரா சேப்டர் - 1’ படப்பிடிப்பு தொடங்கியது.
இந்தப் படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளதால் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், காந்தாரா சேப்டர் 1 திரைப்படம் 1000 ஆண்டுகளுக்கு முன் நடைபெறும் கதையாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் கிளைமேக்ஸில் ரிஷப் ஷெட்டி 1000 போர் வீரர்களுடன் மோதுவது போன்ற காட்சியும் இடம்பெற்றிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: கென் கருணாஸ் இயக்கும் படத்தின் பெயர்!
kantara chapter 1 story has been staged in back to 1000 years
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.