செய்திகள்

கருப்பு வெளியீட்டில் மாற்றம்?

சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் வெளியீடு குறித்து...

தினமணி செய்திச் சேவை

நடிகர் சூர்யா நடித்த கருப்பு திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் கருப்பு. ஆன்மீக பின்னணியில் ஆக்சன் அதிரடி கதையாக உருவான இப்படத்தில் சூர்யா வழக்குரைஞராக நடித்திருக்கிறார்.

இவருடன் த்ரிஷா, ஸ்வாசிகா, காளி வெங்கட், இந்திரன்ஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

முன்னதாக வெளியான டீசரில் சூர்யாவின் தோற்றமும் வசனங்களும் ஆக்சன் பின்னணியில் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தொடர்ந்து இப்படம், செப்டம்பர் வெளியீடாகத் திரைக்கு வரும் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், கருப்பு திரைப்படத்தை 2026 ஆம் ஆண்டு திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீபாவளி வெளியீடாக பிரதீப் ரங்கநாதனின் டூட், எல்ஐகே மற்றும் துருவ் விக்ரமின் பைசன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. 2026 பொங்கலுக்கு விஜய்யின் ஜனநாயகன், சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

reports suggests actor suriya's karuppu movie release postponed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேசும் கண்கள்... ஜனனி!

முடிவில் ஒரு தொடக்கம்...

மெழுகொளியில் உருகுமழகு... கௌரி!

கிளாமர் அப்பீல்... தர்ஷா குப்தா!

ஆசிய கோப்பை: வங்கதேசத்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

SCROLL FOR NEXT