நடிகை செளந்தர்யா தனது காதலனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கேக் வெட்டும் நிகழ்ச்சியின்போது காதலனிடம் அவர் பேசிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
அதில் அவர், நீ சிங்கம் ஏன் தெரியுமா? என்ற கேள்வியைக் கேட்டு அதற்கான பதிலைக் கூறுகிறார். முழுக்க முழுக்க மகிழ்வான தருணத்தில் எடுக்கப்பட்ட இந்த விடியோவில் ரசிகர்கள் பலர் இளம் ஜோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகை செளந்தர்யா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே சில இணையத் தொடர்களிலும் பாடல்களிலும் செளந்தர்யா நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விருந்தினர்கள் பங்கேற்கும் நாளில், செளந்தர்யாவை சந்திக்க அவரின் நீண்ட நாள் நண்பர் விஷ்ணு விஜய் உள்ளே வந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும்போதே தனது காதலை செளந்தர்யா வெளிப்படுத்தினார்.
இதனை சற்றும் எதிர்பாராத விஷ்ணு, மகிழ்ச்சியுடன் காதலை ஏற்றுக்கொண்டு பரஸ்பரமாக தங்கல் காதலை உறுதி செய்தனர். இந்நிகழ்வு பிக் பாஸ் சீசன் 8-ல் மறக்க முடியாத நிகழ்வாக மாறியது.
விஷ்ணு விஜய்யும் பிக் பாஸ் சீசன் 7-ல் போட்டியாளராகப் பங்கேற்றிருந்த நிலையில், தற்போது இந்த பிக் பாஸ் ஜோடிக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
இந்நிலையில், விஷ்ணு விஜய்யின் பிறந்தநாளை நடிகை செளந்தர்யா கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள செளந்தர்யா, நீங்கள் நாளுக்கு நாள் வலுவாக வளர்ச்சியடைந்துகொண்டே இருக்கிறீர்கள். என்னால் பெருமைகொள்ள முடியவில்லை. மாறாக காதலிக்கிறேன். உங்களுடைய அனைத்து முயற்சிகளும் வெற்றிகளாக மாற வேண்டும். என்றும் உங்களுடன் எனப் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பான விடியோவில், கேக் மீது சிங்க உருவம் வைக்கப்பட்டிருந்தது. இதனைக் குறிப்பிட்டு நீ சிங்கம், ஏன் தெரியுமா? எனக் கேள்வி கேட்டார் செளந்தர்யா. இதற்கு விளக்கமளித்த செளந்தர்யா, உலகின் வலுவானவைகளுள் ஒன்று சிங்கம். நீயும் வலுவானவன் எனக் குறிப்பிட்டார். இதனைக் கேட்ட விஷ்ணு, கேலி நிறைந்த மகிழ்ச்சியுடன் சிரித்தார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.