செய்திகள்

அசுரனுடன் கைகோர்க்கும் லப்பர் பந்து இயக்குநர்! தனுஷின் புதிய பட அப்டேட்!

நடிகர் தனுஷுடன் இணையும் லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் தனுஷுடன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பினை லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து வெளியிட்டுள்ளார்.

லப்பர் பந்து படம் வெளியாகி ஓராண்டு நிறைவான நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பினை இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்த எக்ஸ் பதிவில் அவர் தெரிவித்ததாவது,

லப்பர் பந்து வெளியாகி, என்னை ஊக்கமளித்த இந்த நாளில், ஊருக்கே தெரிந்த அந்த அப்டேட்டை நானும் சொன்னல்தான் உங்களுக்கும் அந்த நாளுக்கும் நான் செய்கிற நன்றியாக இருக்கும்! என்னுடைய அடுத்த படம் தனுஷ் சார்கூட தான்.

தனுஷுக்கு ரொம்ப நன்றி. கதை சொல்லும்போது என் பதற்றத்தை பொறுத்துக் கொண்டதற்கு’’ என்று கூறியுள்ளார்.

இருப்பினும், தனுஷுடனான தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை தமிழரசன் பச்சமுத்து முன்னரே தெரிவித்திருந்தார்.

செப்டம்பர் 14 ஆம் தேதியில் நடைபெற்ற இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழரசன் பச்சமுத்து,

"என்னுடைய அடுத்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு இடம் பார்க்கத்தான் இங்கு வந்தேன். தனுஷின் அடுத்த படத்தை நான்கூட இயக்கலாம்.

இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கலாம். இவை அனைத்தும் வதந்தியாக கூட இருக்கலாம்" என்று சூசகமாகத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷின் தீயவர் குலை நடுங்க டீசர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாதே சாகேப் பால்கே விருது! மோகன்லாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

வெளிநாட்டு முதலீடுகள்! கேள்வியும் முதல்வரின் பதிலும்! | M.K. Stalim | DMK

எச்-1பி விசா கட்டண உயர்வால் இந்திய குடும்பங்களுக்கு பாதிப்பு: வெளியுறவு அமைச்சகம்

சூப்பர் 4 சுற்று: இலங்கை பேட்டிங்; பிளேயிங் லெவனில் துனித் வெல்லாலகே!

பூவின் புன்னகை... யாஷிகா!

SCROLL FOR NEXT