செய்திகள்

வைரலாகும் ஆஹா கல்யாணம் தொடரின் நிறைவு நாள் புகைப்படங்கள்!

ஆஹா கல்யாணம் தொடரின் நிறைவு நாள் புகைப்படங்கள்.

இணையதளச் செய்திப் பிரிவு

ஆஹா கல்யாணம் தொடரின் நிறைவு நாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் ஆஹா கல்யாணம். இத்தொடரில் நடிகை அக்‌ஷயா கந்தமுதன் நாயகியாகவும் விக்ரம் ஸ்ரீ நாயகனாகவும் நடித்து வருகின்றனர்.

மேலும் நடிகை மெளனிகா, விபிஷ் அஷ்வந்த், காயத்ரி ஸ்ரீ, பவ்யா ஸ்ரீ, ஆர்.ஜி. ராம், ஆடிட்டர் ஸ்ரீதர், ஷில்பா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியிலும் டிஆர்பியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில், ஆஹா கல்யாணம் விரைவில் நிறைவடையவுள்ளது. இந்தத் தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகளின் படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை ஷில்பா வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைராலாகி வருகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட ஆஹா கல்யாணம் தொடர், 600 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில், வரும் அக். 3 ஆம் தேதி நிறைவடைகிறது.

வரும் அக். 4-க்குப் பிறகு இந்த நேரத்தில் வேறொரு புதிய தொடர் ஒளிபரப்பாகுமா? அல்லது ஏற்கெனவே ஒளிபரப்பாகும் தொடர் இந்த நேரத்துக்கு மாற்றப்படுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில் சேவையில் மாற்றம்

கடைசி ஒருநாள்: டி காக் அரைசதம்; பாகிஸ்தானுக்கு 144 ரன்கள் இலக்கு!

இருளில் தெரிய ஒளியாய் இரு... மிஷா நரங்!

துர்கா, கேர்ள் பிரண்ட்... அனு இமானுவேல்!

இயற்கை... பவித்ரா ஜனனி!

SCROLL FOR NEXT