விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செல்லம்மா தொடர் ஹிந்தியில் மறு உருவாக்கம் செய்யப்படுகிறது.
நடிகை அன்ஷிதா நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர், ஹிந்தியிலும் ஒளிபரப்பாகவுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் 2022 மே முதல் 2024 செப்டம்பர் வரை செல்லம்மா தொடர் ஒளிபரப்பானது. இத்தொடரில் பிக் பாஸ் பிரபலம் அன்ஷிதா நாயகியாக நடித்திருந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே தொடரில் அவர் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகர் அர்ணவ் (இவரும் பிக் பாஸ் பிரபலமே) நடித்திருந்தார்.
கணவரை இழந்து பெண் குழந்தையுடன் இருக்கும் பெண்ணின் கதையாக செல்லம்மா தொடர் ஒளிபரப்பானது. பின்னர் அவரின் வாழ்க்கையில் மீண்டுமொரு காதல் தோன்றி, அது சந்திக்கும் சவால்களே தொடரின் மையக்கருவாக உள்ளது.
உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் நடிகர்களின் நடிப்பும் சேர்ந்ததால், இந்தத் தொடர் தமிழில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கேரளாவைச் சேர்ந்த அன்ஷிதாவுக்கு தமிழில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொடுத்தது.
தற்போது ஹிந்தியில் மறு உருவாக்கம் செய்யப்படவுள்ள செல்லம்மா தொடரில், நடிகை அஷிகா படுகோனே நாயகியாக நடிக்கவுள்ளார். இவர், மாரி தொடரில் நாயகியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
இதையும் படிக்க | இராமாயணம் தொடர் நிறைவடைகிறது! புதிய ஆன்மிக தொடர் அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.