நடிகர் ரிஷப் ஷெட்டி காந்தாரா சேப்டர் - 1 திரைப்படத்தின் போலி போஸ்டர் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படமான காந்தாரா சேப்டர் 1 வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் நேற்று (செப்.22) வெளியிடப்பட்டது.
டிரைலருக்கு இதுவரை அனைத்து மொழிகளிலும் சேர்த்து 7 கோடிக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன.
இந்த நிலையில், டிரைலர் வெளியிட்டு நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் ரிஷப் ஷெட்டியிடம், “மது அருந்துவிட்டு, புகைபிடித்துவிட்டு, அசைவம் சாப்பிட்டுவிட்டு புனிதமான காந்தாரா சேப்டர் 1 திரைப்படத்தைக் காண வரக்கூடாது என போலி போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இது ரசிகர்களிடம் குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” எனக் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு ரிஷப் ஷெட்டி, “உணவு என்பது அவரவர் உரிமை, விருப்பம் சார்ந்தது. அந்த போலி போஸ்டர் வெளியானபோது முதலில் எங்களுக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. ஆனால், ஒரு போலியான விஷயத்திற்கு ஏன் விளக்கமளிக்க வேண்டும் என்றே நாங்கள் எதுவும் சொல்லவில்லை. யாரோ கவனம் ஈர்க்க, வைரல் ஆக காந்தாராவைப் பயன்படுத்திக்கொண்டார்கள். இதற்கும், இப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ரிஷப் ஷெட்டிக்கு தமிழ் டப்பிங் செய்த பிரபல நடிகர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.