முகப்பு
செய்திகள்

முன்பதிவிலேயே ரூ. 100 கோடி... அசத்தும் ஓஜி!

ஓஜி முன்பதிவு குறித்து...

Updated On : 24 செப்டம்பர், 2025 at 4:08 PM
பகிர்:
Updated On : 24 செப்டம்பர், 2025 at 4:02 PM

பவன் கல்யாணின் ஓஜி திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு பெரிய வணிகத்தைச் செய்து வருகிறது.

ஆந்திர துணை முதல்வரான பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து ‘தே கால் ஹிம் ஓஜி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை சாகோ மற்றும் ரன் ராஜா ரன் ஆகியப் படங்களை இயக்கிய சுஜித் இயக்கியுள்ளதால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டிலிருந்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வரும் நிலையில், பவன் கல்யாண் துணை முதல்வரானார். இதனால், படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

Advertisement

Updated On : 24 செப்டம்பர், 2025 at 4:04 PM

பவன் கல்யாணுடன் பிரியங்கா மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகிற நாளை (25) வெளியாகிறது.

இந்த நிலையில், இப்படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகள் ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதுவரை, முன்பதிவு வாயிலாக மட்டுமே ரூ. 100 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்துள்ளதாம்.

summary

pawan kalyan's og movie made records for online bookings

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.