நடிகர் ரிஷப் ஷெட்டி காந்தாரா சேப்டர் - 1 திரைப்படத்தின் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படமான காந்தாரா சேப்டர் 1 வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் நேற்று (செப்.22) வெளியிடப்பட்டது.
டிரைலருக்கு இதுவரை அனைத்து மொழிகளிலும் சேர்த்து 10 கோடிக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன.
இந்த நிலையில், டிரைலர் வெளியிட்டு நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் ரிஷப் ஷெட்டி, "காந்தாரா திரைப்படத்தால் நான் 5 ஆண்டுகளாக என் குடும்பத்தினரைச் சரியாக கவனித்துக் கொள்ள முடியாததுடன் பிள்ளைகளுடன் அதிக நேரத்தையும் செலவிடவுமில்லை. படப்பிடிப்பின்போதே 4 முறை மரணத்தைச் சந்தித்தேன். ஏதோ, நான் நம்பும் தெய்வத்தால் அதிலிருந்து தப்பித்தேன்.
கடந்த 3 மாதங்களாக படக்குழுவினர் யாரும் சரியாகத் தூங்கவில்லை. எல்லாரும் தன்னுடைய படம் போல் இதற்காக வேலை செய்திருக்கின்றனர். இந்த காந்தாரா பயணத்தில் சினிமாவில் பெரிய ஒன்றை நிறைவு செய்ததாக உணர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.