அன்பே டயானா டீசர்!
ஜமா இயக்குநரின் புதிய திரைப்பட டீசர்....
நடிகர் பாரி இளவழகன் நடித்த அன்பே டயானா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ஜமா திரைப்படம் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் பாரி இளவழகன். அப்படத்தில் நாயகனாக அறிமுகமாகி சிறப்பான நடிப்பையும் கொடுத்திருந்தார்.
அடுத்ததாக, அவரே இயக்கி, நடித்த அன்பே டயானா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதனை, லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
Advertisement
Advertisement
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் நடித்த நடிகை ரம்யா ரங்கநாதன் நாயகியாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் சேத்தன், ரோஜா, பரிதாபங்கள் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கோடை வெளியீடாகத் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். சென்னை பெரம்பூரில் நடக்கும் காதல் கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.