செய்திகள்

நிலவுரிமையைப் பேசினாலும் காந்தாரா ஒரு வியாபாரம்தான்: அதியன் ஆதிரை

காந்தாரா குறித்து அதியன் ஆதிரை...

இணையதளச் செய்திப் பிரிவு

தண்டகாரண்யம் படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை காந்தாரா திரைப்படம் குறித்து பேசியிருக்கிறார்.

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அதியன் ஆதிரை தற்போது தண்டகாரண்யம் என்கிற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

செப். 19 வெளியீடாகத் திரைக்கு வந்த இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், தினமணி யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்த இயக்குநர் அதியன் ஆதிரையிடம், ‘காந்தாரா போன்ற மத நம்பிக்கைகளை முன்வைத்து நிலவுரிமையைப் பேசும் படங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ எனக் கேட்கப்பட்டது.

அதற்கு அதியன், ”அறிவியல் கடவுள் இல்லை என்பதைத்தான் சொல்கிறது. காந்தாரா திரைப்படம் நில உரிமையைப் பதிவு செய்தாலும் மாயையும் வைத்திருக்கிறது. அது முழுக்க முழுக்க வியாபாரம்தான்” எனத் தெரிவித்துள்ளார்.

director athiyan athirai spokes about kantara movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமகவில் இருதரப்பு இல்லை: ராமதாஸ்

13 மாத குழந்தை கொடூரக் கொலை! 17 ஆண்டு வழக்கில் கொலையாளிக்கு விஷ ஊசியால் மரண தண்டனை!

காலாண்டு விடுமுறை, வார இறுதி நாள்கள்: சென்னையிலிருந்து சிறப்புப் பேருந்துகள்!

லடாக்கில் ‘ஜென் ஸீ’ போராட்டம் எதிரொலி: கடும் கட்டுப்பாடுகள்!

பகுத்தறிவுக்கு மட்டுமல்ல, கல்வி அறிவுக்கும்பெயர்பெற்ற மாநிலம் தமிழ்நாடு - Prem Kumar

SCROLL FOR NEXT