ஜிவி பிரகாஷ் - சைந்தவி  
செய்திகள்

ஜிவி பிரகாஷ் - சைந்தவிக்கு விவாகரத்து!

ஜிவி பிரகாஷ் - சைந்தவிக்கு விவாகரத்து வழங்கப்பட்டது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

இசையமைப்பாளா் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவிக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷும் பாடகி சைந்தவியும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனா். இத்தம்பதிக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. 12 ஆண்டுகள் சோ்ந்து வாழ்ந்த இவா்கள், கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக கடந்த 2024-ஆம் ஆண்டு அறிவித்தனா்.

இதையடுத்து இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த மாா்ச் மாதம் 24-ஆம் தேதி மனுதாக்கல் செய்தனா். இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், இதுதொடா்பாக இருவரும் முடிவெடுக்க 6 மாத கால அவகாசம் வழங்கி இருந்தது.

ஆறு மாத கால அவகாசம் முடிந்து, சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன் இந்த வழக்கு கடந்த செப்.25-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகியோா் நேரில் ஆஜராகி இருந்தனா். தாங்கள் சோ்ந்து வாழ விரும்பவில்லை, பிரிந்து வாழ விரும்புவதாக இருவரும் தனித்தனியாக நீதிமன்றத்தில் கூறியிருந்தனா். அப்போது, குழந்தையை சைந்தவி கவனித்துக் கொள்வதில் தனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று ஜி.வி.பிரகாஷ் கூறியிருந்தாா்.

இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி, இசையமைப்பாளா் ஜி.வி.பிரகாஷ் பாடகி சைந்தவிக்கு விவாகரத்து வழங்கி தீா்ப்பளித்தாா்.

The Chennai Family Welfare Court has ruled in the divorce case filed by music composer G.V. Prakash and singer Sainthavi, granting them both a divorce.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின், இந்து சமய அறநிலையத் துறைகளின் சேவைகள் வாட்ஸ்ஆப்-இல் பெறும் வசதி தமிழக அரசு தொடங்கியது

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

அழகப்பா பல்கலை. கல்லூரிகளின் முதுநிலை பட்டத் தோ்வு முடிவுகள்!

பாம்பனில் 3வது நாளாக 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு! மீனவா்களுக்கு தடை நீடிப்பு!

SCROLL FOR NEXT