முகப்பு
செய்திகள்

கங்குலி பயோபிக் படப்பிடிப்பு துவக்கம்!

சௌரவ் கங்குலியின் பயோபிக் படப்பிடிப்பு துவங்கியுள்ளது குறித்து...

Updated On : 1 ஏப்ரல் 2026, 7:35 pm IST
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி... (கோப்புப் படம்) - AFP
பகிர்:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய படம் “தாதா”. இப்படத்தில், கங்குலியின் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்கிறார்.

இயக்குநர் விக்ரமாதித்யா மோத்வானே இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படத்தை லவ் ரஞ்சன் மற்றும் அன்குர் கார்க் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், “தாதா” திரைப்படத்தின் படப்பிடிப்பு புதன்கிழமை (ஏப். 1) அன்று தொடங்கியுள்ளதாக, படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 1992 முதல் 2008 ஆம் ஆண்டு வரை விளையாடிய வீரர் சௌவர் கங்குலி அவரின் ரசிகர்களால் “தாதா” என அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

Filming begins on Sourav Ganguly biopic 'Dada'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments