பிரபல பாலிவுட் இயக்குநர் வீட்டின் மீது துப்பாக்கி சூடு!
ரோஹித் ஷெட்டி வீட்டின் மீது துப்பாக்கி சூடு...
பிரபல பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிந்தியில் சிங்கம், சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் ரோஹித் ஷெட்டி. இறுதியாக, சூர்யவன்ஷி திரைப்படத்தின் எழுத்தாளராக பணியாற்றினார்.
இந்த நிலையில், மும்பையிலுள்ள ரோஹித் ஷெட்டியின் இல்லத்தில் நேற்று (பிப். 1) 4 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
Advertisement
Advertisement
உடனடியாக விசாரணையைத் துவங்கிய காவல்துறை புணேவில் வைத்து அந்தக் கும்பலைக் கைது செய்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், இவர்கள் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னாயின் கூட்டாளிகள் எனத் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடகர் சித்து மூஸேவாலா, மகாராஷ்ட்ரா அமைச்சர் பாபா சித்திக் ஆகியோரைச் சுட்டுக் கொன்றது, நடிகர் சல்மான் கானைக் கொலை செய்ய தொடர்ந்து முயன்று வருவது என வடமாநிலத்தில் லாரன்ஸ் பிஷ்னாயின் அத்துமீறல்கள் வருவது குறிப்பிடத்தக்கது.