சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப் பெண்ணே தொடர் இனி வாரத்தின் ஏழு நாள்களிலும் ஒளிபரப்பாகவுள்ளது.
எதிர்நீச்சல், சிங்கப் பெண்ணே, மூன்று முடிச்சு, ஆடுகளம் தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. வரும் பிப். 9 ஆம் தேதி முதல் புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிங்கப் பெண்ணே தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும், இனி இரவு 9.30 மணிக்கு வாரத்தின் அனைத்து நாள்களிலும் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப் பெண்ணே தொடர் 2023 அக்டோபர் 9 ஆம் தேதிமுதல் ஒளிபரப்பாகிவருகிறது. இத்தொடருக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பையடுத்து, கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
கிராமத்தில் பிறந்த விவசாயியின் மகள், ஆட்சியராக வேண்டும் என்ற குறிக்கோளுடன் நகரத்திற்கு வந்து சந்திக்கும் சவால்களை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்படுகிறது.
இந்தத் தொடரில் நடிகை மணீஷா மகேஷ் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். கண்ணே கலைமானே தொடரை இயக்கிய தனுஷ், சிங்கப் பெண்ணே தொடரை இயக்குகிறார்.
மேலும் இந்தத் தொடரில் அமல்ஜித், தர்ஷக் கெளடா, விஜே பவித்ரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் சிங்கப் பெண்ணே தொடர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று டிஆர்பியிலும் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.