சேயோன் - சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படம்!
எஸ்கே - 26 படப் பெயர் அறிவிப்பு...
நடிகர் சிவகார்த்திகேயனின் 26-வது திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தன் 26-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, தாய் கிழவி திரைப்பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார்.
தற்போது, இப்படத்திற்கு ‘சேயோன்’ எனப் பெயரிட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இப்படத்தின் கதை முழுக்க, மதுரை பின்னணியில் நடைபெறவுள்ளதாகத் தெரிகிறது. மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, விவேக் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் கொண்டாட்டம் நாளை (பிப். 17) காலை 10 மணிக்கு துவங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
summary