ஸ்டிரேஞ்சர் திங்ஸ்: பிரபல இணையத் தொடரான ஸ்டிரேஞ்சர் திங்ஸ் சீசன் 5-ன் இறுதி எபிசோட் வெளியானதால் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் முடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இணையத் தொடரான ஸ்டிரேஞ்சர் திங்ஸ் சீசன் 5-யின் இறுதி எபிசோட் புதன்கிழமை (டிச. 31) இரவு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ள இந்த இணையத் தொடரின் இறுதி அத்தியாயம் (சீசன்) மூன்று பிரிவுகளாக வெளியிடப்பட்டது. முதல் 4 எபிசோட்கள் நவ.26 அன்றும், அடுத்த 3 எபிசோட்கள் டிச. 25 அன்றும் வெளியாகின.
இறுதியான 8 ஆவது எபிசோடின் மீது மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்த நிலையில், நேற்று இரவு வெளியானவுடன் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் பார்க்க முயன்றதால் நெட்பிளிக்ஸ் தளம் சுமார் 1 நிமிடத்திற்கு முடங்கியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு நெட்பிளிக்ஸ் தளம் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பியது.
முன்னதாக, பிரபல இணையத் தொடரான ஸ்டிரேஞ்சர் திங்ஸின் 5 ஆவது சீசன் மட்டும் ரூ.3,300 கோடி செலவில் உருவானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.