ஜன நாயகன் போஸ்டர்  
செய்திகள்

எல்லோரும் நல்லா இருப்போம்! ஜன நாயகனின் புதிய போஸ்டர்!

ஜன நாயகனின் புதிய போஸ்டர் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஜனநாயகன் படக்குழுவினர் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் விஜய்யின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் வருகின்ற ஜன. 9 ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.

முழுநேர அரசியலுக்கு வந்த பின் விஜய் நடிப்பில் வெளியாகும் இறுதியான திரைப்படம் ஜன நாயகன் என்பதாலும் இனி விஜய்யை திரையில் எப்போது பார்ப்போம் எனத் தெரியாததாலும் அவரின் ரசிகர்கள் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கின்றனர்.

சமீபத்தில் மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற ஜன நாயகன் படத்தில் இசை வெளியீட்டு விழாவில் 90,000 -க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்தனர்.

இந்த நிலையில், விஜய் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், புதிய போஸ்டரை ஜன நாயகன் படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில், “நல்லா இருப்போம், நல்லா இருப்போம், எல்லோரும் நல்லா இருப்போம். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஜன நாயகன் படத்தின் டிரைலர் நாளை (ஜன. 2) வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

New year poster of vijay's Jana nayagan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடுரோட்டில் சரிந்து விழுந்த இரும்புக் கம்பிகள்! நல்வாய்ப்பாக விபத்து தவிர்ப்பு!

நியூ யார்க் மேயர் மம்தானியின் அதிகாரம் என்ன? டிரம்ப்புக்கு தலைவலி ஆவரா?

அர்ஜுன் இயக்கும் சீதா பயணம் படத்தின் வெளியீட்டுத் தேதி!

மனிதன் தெய்வமாகலாம்..! செல்வராகவனின் புதிய படம்!

நேருக்கு நேர் மோதிய பைக்குகள்! பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

SCROLL FOR NEXT