நடிகர் விஜய்  
செய்திகள்

ஜன நாயகன் முன்பதிவு தாமதம்! ஏன்?

ஜன நாயகன் படத்திற்கான முன்பதிவில் தாமதம் ஏற்பட்டு வருகிறது...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தாமதத்திற்கு திருப்பூர் சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற ஜன. 9 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் பல ரசிகர்கள் திரையரங்குகளிலேயே இப்படத்தைப் பார்க்க வருவார்கள் என்பதால் வசூலில் பெரிய வெற்றியைப் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை இப்படத்தின் டிரைலர் வெளியாகவுள்ள நிலையில், இன்னும் முதல் நாளுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்காமல் இருக்கிறது. இதற்கு அரசியல்தான் காரணம் என சமூக வலைதளைங்களில் விவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், முன்னாள் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன், “ஜன நாயகன் திரைப்படத்திற்கு தயாரிப்பு தரப்பிலிருந்து 70 - 80 சதவீதம் திரையரங்க பங்கீடாகக் கேட்கின்றனர். அவ்வளவு தொகையைக் கொடுக்க முடியாது என்பதற்காகவே முன்பதிவை நிறுத்தி வைத்திருக்கிறோம். இதுகுறித்து நடிகர் விஜய்யிடம் பேசியிருக்கிறேன். வேறு எந்த அரசியல் காரணங்களும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

திரையரங்கங்களுக்கான பங்கீட்டுத் தொகையில் சமரசம் ஏற்பட்ட பின் முன்பதிவு துவங்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

முறைசெய்து காப்பாற்றும் முதலமைச்சர் எல்லார்க்கும் எல்லாம்

மீண்டும் தலைப்புச் செய்திகள்

அதீத பேட்டரி திறன்... அறிமுகமானது ஓப்போ ஏ6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்!

SCROLL FOR NEXT