தனுஷ், சிலம்பரசன், வெற்றி மாறன் 
செய்திகள்

தனுஷ் சிறையிலிருக்கும்போது... தாணு பகிர்ந்த தகவல்!

அரசன் கதை குறித்து பகிர்ந்த தாணு...

இணையதளச் செய்திப் பிரிவு

சிலம்பரசன் - வெற்றி மாறனின் அரசன் திரைப்படத்தின் ஒன்லைன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் வடசென்னை திரைப்படத்தின் கதையுடன் தொடர்புடைய படமாக அரசன் உருவாகிறது.

இதன் படப்பிடிப்பு கோவில்பட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், சிம்பு, விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய படத்தின் தயாரிப்பாளர் தாணு, “அரசன் சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது. இயக்குநர் வெற்றி மாறன் அழைத்து, நடிகர் சிலம்பரசன் கேரவேன் செல்லாமல் முழு நேரமும் படப்பிடிப்பு தளத்திலேயே அனைவருடனும் நல்ல நட்பில் இருப்பதாகத் தெரிவித்தார். கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது.

வடசென்னை உலகுடன் தொடர்புடைய கதையாக உருவானாலும் நடிகர் தனுஷ் சிறையிலிருக்கும்போது அரசனின் கதை நடக்கிறது. இதில், இடம்பெறும் விஜய் சேதுபதியின் காட்சிகள் மிரட்டலாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

arasan movie happen time is vadachennai anbu in jail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT