ரஜினி 173 - இயக்குநர் அறிவிப்பு! மீண்டும் அனிருத் கூட்டணியில்!
ரஜினிகாந்த் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர்கள் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 173 ஆவது திரைப்படத்தை இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
மேலும், இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் அறிவித்துள்ளனர். ரஜினியின் ஜெயிலர் 2 படத்துக்கும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.
Advertisement
Advertisement
சிவகார்த்திகேயன் நடிப்பில் 2022-ல் வெளியாகிய டான் படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்தார். இந்தப் படத்துக்கும் அனிருத் தான் இசையமைத்திருந்தார்.
இந்தப் படத்தில் கமல்ஹாசனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, இந்தப் படத்தை மூத்த இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக அறிவிப்பு வெளியான நிலையில், சில நாள்களிலேயே இப்படத்தில் இருந்து சுந்தர் சி விலகினார்.
The announcement of Rajinikanth - Kamal Haasan film
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.