தில்லிதான் இந்தியாவா? வெளியானது பராசக்தி டிரைலர்!
நாங்கள் இந்தி திணிப்புக்குத்தான் எதிரானவர்கள்; இந்திக்கும் இந்தி பேசுபவர்களுக்கும் அல்ல என்ற வசனத்திற்கு வரவேற்பு
இயக்குநர் சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள பராசக்தி படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
அதில், நாங்கள் இந்தி திணிப்புக்குத்தான் எதிரானவர்கள்; இந்திக்கும் இந்தி பேசுபவர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல என்பன போன்ற வசனங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளன.
தில்லிதான் இந்தியாவா? செந்தமிழைக் காக்க பெரும் சேனை ஒன்று உண்டு, என்பன போன்ற வசனங்களும் இடம்பெற்றுள்ளன.
Advertisement
Advertisement
சுதா கொங்கரா இயக்கியுள்ள பராசக்தி திரைப்படம், 1964-ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. மொழித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் டிரைலரில் இடம்பெற்றுள்ளன.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமாரின் 100வது படமாக இப்படம் உள்ளதால், டிரைலரின் பின்னணி இசையும் வலுவாக உள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
அதர்வா உடனான இந்தி எதிர்ப்பு போராட்டம், இடையிடையே இந்தி பேசும் பெண் உடனான சிவகார்த்திகேயனின் காதல், ரவி மோகனின் வில்லத்தனம் என படத்தின் காட்சிகளும் வசனங்களும் ஈர்க்கும் வகையில் உள்ளன.
sivakarthikeyans Parasakthi trailer has been released
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.