வியானா / விஜே பார்வதி படம் - எக்ஸ்
செய்திகள்

விஜே பார்வதியை பயன்படுத்திக்கொண்டது பிக் பாஸ்: வியானா

தொலைக்காட்சி டிஆர்பிக்காக விஜே பார்வதியை பிக் பாஸ் பயன்படுத்திக்கொண்டதாக போட்டியாளர் வியானா குற்றம் சாட்டியுள்ளது குறித்து..

இணையதளச் செய்திப் பிரிவு

தொலைக்காட்சி டிஆர்பிக்காக விஜே பார்வதியை பிக் பாஸ் பயன்படுத்திக்கொண்டதாக, முன்னாள் போட்டியாளர் வியானா குற்றம் சாட்டியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 13 வது வாரத்தை எட்டியுள்ளது. குறைந்த வாக்குகளைப் பெற்றதாக கடந்த வாரத்துடன் சுபிக்‌ஷா வெளியேற்றப்பட்டார்.

அதற்கு முன்பு, விஜே பார்வதியும் நடிகர் கமருதீனும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். நடிகை சான்ட்ராவிடம் தகாத முறையில் பேசி, வன்முறையில் ஈடுபட்டு காரில் இருந்து தள்ளிவிட்டதால், இருவருக்கும் விஜய் சேதுபதி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார்.

ரெட் கார்டு வாங்கிய விஜே பார்வதி, கமருதீன்

இந்நிலையில், விஜே பார்வதிக்கும் கமருதீனுக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது குறித்து நடிகை வியானா விடியோ வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

விடியோவில், டிஆர்பிக்காக விஜே பார்வதியை பிக் பாஸ் பயன்படுத்திக்கொண்டதாகக் குறிப்பிட்டு அவர் பேசியதாவது:

''பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடத்தப்படும் போட்டிகள் அனைத்தும் பொழுதுபோக்கிற்காகவே. அதில் தனிமனித தாக்குதல் போன்ற அசம்பாவிதங்கள் நடக்கும்போது அதனை ஊக்குவிக்கக் கூடாது. அனைத்தையும் இயல்பாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒரு சம்பவம் சிறிதாக நடக்கும்போதே அதனைக் கண்டித்திருந்தால் இந்த அளவுக்கு நடந்திருக்காது.

ஒருவர் இன்று காரில் இருந்து வன்முறையாக மற்றொருவரை தள்ளிவிடுகிறார். எதைக் கூறினால் அவர் கடுமையாக உடைந்துபோவார் என்பதை அறிந்து அதனைக் கூறி காயப்படுத்துகின்றனர்.

இது இந்த அளவுக்கு செல்லக் காரணம் என்ன? ஆரம்பத்திலேயே இவ்வாறு நடந்துகொள்வதை கடுமையாக கண்டித்திருந்தால், ரெட் கார்டு கொடுக்கும் அளவுக்கு நடந்திருக்காது'' என விடியோவில் வியானா குறிப்பிட்டுள்ளார்.

வியானா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 90 நாள்கள் இருந்த விஜே பார்வதி ஒவ்வொரு வாரமும் தனிமனித தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளார். மற்ற போட்டியாளர்களிடம் அதிக பிரச்னைகளில் ஈடுபட்டதாக பல முன்னோட்ட விடியோக்களும் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தொலைக்காட்சி டிஆர்பிக்காக விஜே பார்வதியை பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைத்துக்கொண்டு, இறுதிப்போட்டிக்கு முன்னதாக ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டுள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

bigg boss 9 tamil viyana about vj parvathy kamarudin red card issue

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துலா ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

எஸ்ஐஆா்: 12 மாநிலங்களில் 6.5 கோடி வாக்காளா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையம் தகவல்

பென்காக் சிலாட் தமிழகத்துக்கு 2-ஆவது பதக்கம்

9 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி: அட்டவணை வெளியீடு

50,000 பொது சுகாதார மையங்களுக்கு தரச் சான்று: மத்திய அரசு

SCROLL FOR NEXT