கமருதீன், விஜே பார்வதி. 
செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில்... மீண்டும் கமருதீன், விஜே பாரு!

பிக் பாஸ் இறுதிப் போட்டிக்கு வந்த கமருதீன், விஜே பார்வதி.

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் - 9 நிகழ்ச்சியிலிருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கமருதீன், விஜே பார்வதி ஆகியோர் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர்.

நேரடியாக இறுதி வாரத்துக்கு செல்வதற்கான (Ticket To Final) போட்டியில், சக போட்டியாளர் சான்ட்ராவை பார்வதி மற்றும் கமருதீன் இணைந்து காரில் இருந்து கீழே தள்ளிவிட்டது, தனிப்பட்ட முறையில் வரம்பைமீறி அநாகரிகமாக பேசியது உள்ளிட்ட காரணங்களால் ரசிகர்களுக்கு அவர்கள் மீது கோபத்தை ஏற்படுத்தியது

இதனால் சான்ட்ராவை தள்ளிவிட்ட பார்வதி மற்றும் கமரூதினுக்கு ரெட் கார்டு வழங்க வேண்டும் என்று சமூக ஊடங்களில் பிக் பாஸ் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, பார்வதி மற்றும் கமரூதின் ஆகிய இருவருக்கு தொகுப்பாளர் விஜய் சேதுபதி ரெட் கார்டு வழங்கி, போட்டியைவிட்டு வெளியே அனுப்பினார்.

இதனிடையே, விஜே பார்வதிக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டதற்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர்.

இதனிடையே பிக் பாஸ் இறுதிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக கமருதீன் மற்றும் விஜே பார்வதிக்கு நிகழ்ச்சி குழுவினர் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த அழைப்பை ஏற்று இருவரும் கலந்து கொண்டனர்.

அப்போது சான்ட்ராவிடன் விஜே பார்வதி மற்றும் கமருதீன் மன்னிப்புக் கேட்டனர். அவர்களின் மன்னிப்பை சான்ட்ராவும் ஏற்றுக் கொண்டார்.

பிக் பாஸ் 9 இறுதிப்போட்டியில் இருவரும் கலந்துகொண்ட விடியோவொன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kammarudeen and VJ Parvathy, who were given a red card and eliminated from the Bigg Boss - 9 show, participated in the grand finale held yesterday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒருவரின் லாபம், ஆதாயம் பற்றி ஜோதிடம் சொல்வதென்ன?

சருமம் வறண்டு போவதற்கான காரணம் இதுதான்! மாய்ஸ்சரைசரை இப்படி பயன்படுத்துங்கள்!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்குப் பதிலாக மாற்று அணி களமிறக்கப்படுகிறதா?

1 மணி நேரம் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடர்!

கவனம் ஈர்க்கும் பூக்கி புரோமோ!

SCROLL FOR NEXT