இயக்குநர் பேலா தார் காலமானார்!
இயக்குநர் பேலா தார் மறைவு...
உலகின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படும் பேலா தார் காலமானார்.
ஹங்கேரிய இயக்குநர் பேலா தார் (bela tarr - 70) உடல் நலக்குறைவால் நேற்று (ஜன. 6) காலமானார். இவர் இயக்கிய சடான்டாங்கோ (Sátántangó) - 7.5 மணி நேர திரைப்படம்!, வெர்க்மெய்ஸ்டர் ஹார்மோனிஸ் (Werckmeister Harmonies), தி டூரின் ஹார்ஸ் (The Turin Horse) உள்ளிட்டவை உலக சினிமா வரலாற்றில் மிகச்சிறந்த திரைப்படங்களாகவே கருதப்படுகின்றன.
ஹங்கேரிய வாழ்க்கைப் பின்னணியில் அரசியல், தனிமனித அக வீழ்ச்சிகள் ஆகியவற்றை அழகியலுடன் கூடிய திரைமொழியில் முன்வைத்தவர் என்றே விமர்சகர்கள் இவரை மதிப்பிடுகின்றனர்.
Advertisement
Advertisement
”எனக்கு கதைகளைப் பற்றி கவலையில்லை. காரணம், நாம் ஒன்றையே மாற்றி மாற்றி சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால், சினிமா என்பது வெறும் கதையல்ல. அது, காட்சி, ஒலி, ஏகப்பட்ட உணர்வுகளைக் கொண்டது. கதைகள் அங்கு ஏதோ ஒன்றை ஒருங்கிணைக்கிறது” என்பது பேலா தாரின் கருத்தாக இருந்திருக்கிறது.
9 திரைப்படங்களையும் சில குறும்படங்களையும் இயக்கி மிகச்சிறந்த விருதுகளை வென்ற பேலா தாரின் இந்த திடீர் மறைவு உலகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.