செய்திகள்

ஜிவியின் ஹேப்பி ராஜ் படப்பிடிப்பு நிறைவு!

ஹேப்பி ராஜ் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது....

இணையதளச் செய்திப் பிரிவு

ஜிவி பிரகாஷ் குமார் நடிக்கும் ஹேப்பி ராஜ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

ஜி.வி.பிரகாஷ் தயாரித்து நடித்த கிங்ஸ்டன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து, அவர் நடித்த பிளாக்மெயில் திரைப்படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.

தற்போது, நடிகர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், ஹேப்பி ராஜ் என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.

உறவுச்சிக்கல்களை நகைச்சுவை பாணியில் உருவாக்கிய இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஜிவிக்கு ஜோடியாக நடிகை கௌரி பிரியாவும் முக்கிய கதாபாத்திரங்களில் அப்பாஸ் மற்றும் ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்க கனவ சொல்லுங்க திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர்!

ஜன நாயகனுக்கு மீண்டும் சிக்கல்: தணிக்கை வாரியம் மேல்முறையீடு!

அமித் ஷா அலுவலகத்துக்கு வெளியே திரிணமூல் எம்பிக்கள் போராட்டம்! குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்!

ஜன நாயகனுக்கு யு/ஏ தணிக்கைச் சான்று வழங்க உத்தரவு!

ரூ. 18 லட்சம் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்!

SCROLL FOR NEXT