ஜன நாயகன் டிரைலரில்... 
செய்திகள்

வெளிநாடுகளில் ஜன நாயகன் வெளியீடு ஒத்திவைப்பு!

இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 39 நாடுகளில் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படம் இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் வரும் ஜன.9 வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகும் “ஜன நாயகன்” திரைப்படம் வரும் ஜன.9 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் அவர் நாயகனாக நடிக்கும் கடைசி திரைப்படம் எனக் கருதப்படும் இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில், “ஜன நாயகன்” படத்துக்குத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்காததால், இந்த விவகாரம் குறித்து ஜன.9 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனால், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா, மலேசியா உள்ளிட்ட 39-க்கும் அதிகமான நாடுகளில் ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக, விநியோகிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

It has been announced that actor Vijay's film 'Jananayagan' will not be released in countries like England and France on January 9th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரதட்சிணையாக கிரீன்லாந்து! டென்மார்க் இளவரசியை டிரம்ப் மகன் திருமணம் செய்தால்!!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 26 காசுகள் சரிந்து ரூ.90.16 ஆக நிறைவு!

மதத் தீவிரவாதிகளுடன் கைகோர்த்துள்ளார் முகமது யூனுஸ்! - தஸ்லிமா நஸ்ரின் தாக்கு!

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ருதுராஜ் கெய்க்வாட்!

போலியான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றும் திமுக: அண்ணாமலை

SCROLL FOR NEXT