கமல் ஹாசன், சிவகார்த்திகேயன்  
செய்திகள்

நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை... பராசக்தியைப் பாராட்டிய கமல் ஹாசன்!

பராசக்தி திரைப்படத்தைப் பாராட்டிய கமல் ஹாசன்...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் கமல் ஹாசன் பராசக்தி திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.

நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல் ஹாசன் பராசக்தி திரைப்படத்தைப் பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,

”தமிழ்த் தீ பரவட்டும்!

அன்புள்ள இளவல், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு... பராசக்தி படத்தைப் பார்க்கத் தொடங்கும் முன் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்தப் படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது என்று. ஆம், இந்தப் படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல, என் உண்மையான வாழ்த்தும் கூட. இந்தப் படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம்.

பின்னால் வந்தாலும் முந்திச் சொல்ல வேண்டியது. உணர்ச்சி முந்திக்கொண்டதால் பின்தங்கிய குறிப்பு இது. முதல் பாராட்டு இந்த பயோஃபிக்ஷன் கதையையும், இதன் இயக்குநர் சுதா கொங்கராவையும், இக்கதையைத் தேர்ந்து இதற்காக உழைத்து வெற்றியும் காணப்போகும் தம்பி சிவகார்த்திகேயனையும் சேரும்.

இந்தச் சினிமாச் சரித்திரத்தில் இணைந்துவிட்ட ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும், ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், எடிட்டர் சதீஷ் சூரியா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மற்றும் இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெற்றிருக்கலாம், ஆனால்... விராட் கோலி குறித்து முன்னாள் வீரர்!

இடைவேளை எடுங்கள் பிரபாஸ்... புலம்பும் ரசிகர்கள்!

ஹெத்தை அம்மன் திருவிழா- எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

கட்டுப்பாட்டை இழந்த கார்! நூலிழையில் உயிர்தப்பிய வாகனங்கள்!

கச்சத்தீவு திருவிழா: ஜன. 15 முதல் விண்ணப்பம் விநியோகம்

SCROLL FOR NEXT