பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாடகர் கானா வினோத் பெற்ற சம்பளம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பணப்பெட்டி வைக்கப்பட்டது. பணப்பெட்டியில் பணத்தை சேர்ப்பதற்காக போட்டிகளும் வைக்கப்பட்டன.
போட்டியாளர்கள் முனைப்புடன் போட்டிகளில் பங்கேற்று ரூ. 13 லட்சம் பணத்தை சேர்த்தனர். 'எல்பிடபுள்யூ- லவ் பியாண்ட் விக்கெட்' இணையத் தொடர் புரோமோஷனுக்கு வந்தவர்கள் ரூ. 5 லட்சம் கொடுத்த நிலையில், பணப்பெட்டியில் ரூ. 18 லட்சம் சேர்ந்தது.
போட்டியாளர்கள் யாரேனும் நிகழ்ச்சியில் தொடர விருப்பம் இல்லை என்றால், பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பாடகர் கானா வினோத் ரூ. 18 லட்சம் கொண்ட பணப்பெட்டியை ,எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
இவர் வெற்றியாளர் ஆவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இவர் பணப்பெட்டியை எடுத்து சென்றதது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருந்தாலும், தனக்கு பணத்தின் தேவை இருப்பதாகவும், தான் சுயமாக சிந்தித்து எடுத்துச்சென்றதாகவும் கானா வினோத் நேற்றைய நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
அவர், பெட்டி எடுத்துகொண்டு வெளியே செல்வதற்குமுன், ”பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பெற்ற ரூ. 35 லட்சம் மற்றும் பணப்பெட்டியில் ரூ. 18 லட்சம், இதுவே எனக்கு போதும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கானா வினோத் சம்பளமாக ரூ. 53 லட்சம் சம்பாதித்துள்ளாதாகக் கூறப்படுகிறது.
மேலும், கானா வினோத் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து, ஏராளமான ரசிகர்களையும் சம்பாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.