பிரபல மலையாள நடிகை மியா ஜார்ஜ் தனது இன்ஸ்டா பக்கத்தில் 2025-ல் படித்த புத்தகங்கள் குறித்து பதிவிட்டுள்ளார்.
தமிழில் அமரகாவியம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மியா ஜார்ஜ் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
33 வயதாகும் இவருக்கு கடந்த 2020-ல் திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது. கடைசியாக இவரது நடிப்பில் தலவன் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
படிக்க ஆரம்பித்தது ஏன்?
இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் புத்தகங்கள் குறித்து அவர் கூறியதாவது:
கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்புதான் படிப்பதில் தீவிர ஆர்வம் காட்டினேன். என்னுடைய நோக்கம் என்னவென்றால், ஸ்கிரீன் டைமிங்கை குறைக்கவும், வெட்டியாக நாள்களைப் போக்காமல் பயனுள்ளதாக மாற்ற அர்த்தமுள்ள நூல்களைப் படிக்க முடிவெடுத்தேன்.
தொடக்கத்தில் ஃபீல் குட் புத்தகங்களைப் படித்தேன். பிறகு, எனக்கு பிடிக்கும் என்றே நினைக்காத சுய முன்னேற்றம் குறித்த புத்தங்களைப் படித்தேன்.
2025-ல் மட்டும் 36 புத்தகங்கள் படித்தேன்
ஒவ்வொரு ஆண்டும் நான் புதிய புதிய வகைமைகளில் படித்தேன். என்னுடைய சௌகரியத்துக்கு அப்பாற்பட்ட புத்தங்களைப் படித்தேன்.
புத்தகங்களை அடுக்குவது பிடிக்கும். பயணத்துக்குச் சென்றாலும் என்னுடன் ஒரு புத்தகம் இருக்கும். புத்தகம் படிப்பது தற்போது தீவிரமான பழக்கமாகிவிட்டது.
சில நண்பர்களுக்கு என்னுடைய புத்தங்கள் பார்த்து குழப்பம் வரக்கூடும் (குறைவாக இருந்தாலுமே). ஏனெனில் பல வகைமையான புத்தகங்கள் என்னிடம் இருக்கும்.
2025-ல் மட்டும் 36 புத்தகங்கள் படித்தேன். ஒரு மாதத்திற்கு 3 புத்தகங்கள். தாமதமாக படிக்கும் பழக்கம் வந்த ஒருவருக்கு இது நல்ல முன்னேற்றம்தான்.
என மகனும் புத்தகங்கள் படிக்கிறான்
சுவாரசியமான விஷயம் என்னவென்றால் எனது மகன் லூகாவும் படிப்பதில் ஆர்வம் காட்டுகிறான். அவனும் அவனது தாய் போலவே படிப்பான் என நம்புகிறேன்.
எனது 2025 புத்தகங்களைப் படம் பிடித்துள்ளேன். சில புத்தகங்களை புகைப்படம் எடுக்க முடியவில்லை. நீங்களும் எனக்கு நல்ல புத்தகங்களை பரிந்துரைக்கலாம்!
சென்னை புத்தகத் திருவிழா ஜன.8 முதல் 21ஆம் தேதி வரை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.